2017, 2018-ம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கிடையாது

       2017, 2018-ம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் இலவச மடிக்கணினி திட்டம் ஒன்று. தற்போது இந்த திட்டம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,2017, 2018-ம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கிடையாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments