மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி 2020, ஜன.8 ம் தேதி இந்தியா முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதுடன், ஏழாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகள் அனைத்தையும் களைய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இந்திய பள்ளி ஆசிரியர்கூட்டமைப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில், தேசிய அளவில் ஜன.8 ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.20 கோடி பேர் பங்கேற்புசமீபத்தில்இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது.இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயலாளர் மயில், தலைவர் மணிமேகலை, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தேசிய பொதுக்குழு உறுப்பினர் மோசஸ் பங்கேற்றனர். வேலை நிறுத்தத்தின் முக்கிய நோக்கம் புதிய கல்விக் கொள்கை, புதிய பென்ஷன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே. இதில் இந்திய அளவில் 20 கோடி பேர் பங்கேற்க உள்ளனர், என்றார்.
0 Comments