5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகள்.
அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் முக்கிய தகவல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆயத்த பணிகள் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி கீழ்க்கண்ட பணிகள் முடிக்கப்பட்டு தயாராக வைத்திருக்குமாறு அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 1. ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தேர்வு மையங்களை அந்தந்த குறுவளமைய தலைமை ஆசிரியருடன் ஒருங்கிணைந்து தேர்வு மையங்கள் தேர்வு செய்ய வேண்டும் 2. ஐந்தாம் வகுப்பில் பத்துக்கு அதிகமாக மாணவர்கள் உள்ள பள்ளிகள் அந்தப் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம். 3. 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் அருகில் உள்ள ஒரு கிலோ மீட்டருக்குள் உள்ள பள்ளியுடன் ஒன்றிணைத்து தேர்வு மையம் அமைக்கலாம்.
எட்டாம் வகுப்பை பொருத்தவரை மூன்று கிலோமீட்டர்களுக்கு மிகாமல் தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும். 5. தனியார் பள்ளிகளிலும் தேர்வு மையம் அமைக்கலாம். 6. EMIS ல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் அனைத்து விபரங்களும் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். EMIS ல் இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத இயலாது. தனியார் பள்ளிகளுக்கும் மேற்கண்ட தகவலை தெரிவித்து EMIS ல் உள்ள விவரங்கள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும்.
தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை தொடக்க அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத இயலாது. மேற்கூறியவாறு குறுவள மைய தலைமையாசிரியர்களுடன் இணைந்து தேர்வு மையங்களை தேர்வு செய்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments