ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை,ஒழுக்க கல்வியை போதிப்பது அவசியம்


    ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, ஒழுக்க கல்வியை விருப்ப பாடமாக்கி, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., இயக்குனர் பிஸ்வஜித் சாகா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளிகளில் ஒழுக்க கல்வியை போதிப்பது அவசியம். இது தொடர்பாக, ராமகிருஷ்ணா மிஷன் பாடத் திட்டங்களை உருவாக்கி, புத்தகங்கள் தயாரித்துள்ளது.


     அவற்றை பயன்படுத்தி, ஒழுக்க கல்வி வகுப்பு நடத்தலாம்.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, இந்த வகுப்புகளை நடத்த, பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த பாடத்தை விருப்பத்தின் அடிப்படையில், பள்ளிகள் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments