பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் கோவையில் முதன்முறையாக ஆய்வு கூட்டம்

    பள்ளிக்கல்வி கமிஷனராக பொறுப்பேற்றுள்ள சிஜிதாமஸ் வைத்யன், அரசுப்பள்ளி ஆசிரியர்களுடன், நேற்று கோவையில் முதன்முறையாக ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்களை கண்காணிக்கும் வகையில், புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜிதாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், கட்டமைப்பு வசதிகள், மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டப்பணிகளை மேற்பார்வையிடுவதோடு, இயக்குனர்களை கண்காணிக்கும் பொறுப்பு, இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.எனவே, மண்டல வாரியாக ஆசிரியர்களுடன்கலந்துரையாடி, கல்வித்தரத்தை மேம்படுத்த, ஆய்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

   கோவை மண்டலத்திற்கான ஆய்வு கூட்டம், பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.தொடக்க கல்வி, உயர்நிலை, மேல்நிலை வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுடன் பிரத்யேகமாக கலந்துரையாடினார். இன்று (டிச. 10 ம் தேதி),சேலத்தில் ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. வரும் 19 ம் தேதி வரை, விழுப்புரம், சென்னை, திருச்சி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆய்வு கூட்டம் நடக்கிறது.


Post a Comment

0 Comments