10-ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறது: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

   10-ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறது: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Click here to view pdf

Click here to view instructions pdf



  10-ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 21ம் தேதி முதல் 28-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் உரிய முறையில் நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2020 - பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் ( சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் உட்பட ) அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல் , மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் ( Download ) செய்தல் மற்றும் சில அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து . ஆணை : நடைபெறவிருக்கும் மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணாக்கர்களுக்கு ( பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் , சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் உட்பட ) அறிவியல் செய்முறைத் தேர்வுகளை 21 . 02 . 2020 முதல் 28 . 022020 வரை நடத்திட , அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது . கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .


Post a Comment

0 Comments