2020-ம் ஆண்டில் அதிகரிக்கவிருக்கும் ஸ்மார்ட்ஃபோன் ஹேக்கிங்

      2020-ம் ஆண்டில் அதிகரிக்கவிருக்கும் ஸ்மார்ட்ஃபோன் ஹேக்கிங்



     மொபைல்களைப் பயன்படுத்தி பலவிதமான குற்றச் செயல்கள் உலகம் முழுவதும் அரங்கேறி வருகிறது. அதிலும் குறிப்பாக மால்வேர் ட்ரோஜான்கள் உள்ளிட்ட வைரஸ்கள் மொபைலையே குறிவைக்கின்றன. இது மேலும் 2020-ஆம் ஆண்டில் அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-ஆம் ஆண்டில் ஹேக்கிங் 54 சதவீதம் அதிகரித்திருந்தது, அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது இந்த ஆய்வு.இந்த அறிக்கையில், சைபர் குற்றங்களைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் கடந்த ஆண்டை விட ஆறு மடங்கு அதிகரித்துதான் உள்ளது. மேலும் 5ஜி மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) சாதனங்களின் வருகைக்குப் பின்னர் இத்தகைய குற்றங்களை கணிப்பது கூட கடினம்தான் என்கிறார்கள். காரணம் ஹேக்கிங்கின் வேகம் அத்தகையது என்று முன்னணி கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவனமான கிராண்ட் தோர்ன்டனின் அறிக்கை தெரிவித்துள்ளது



   இந்த ஆண்டு இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 673 மில்லியனை எட்டும் என்று அறிக்கை எதிர்பார்க்கிறது. "சைபர் பாதுகாப்பு மீறல்களில் தொண்ணூற்று ஐந்து சதவீதம் மனிதர்களின் கவனக் குறைபாடுகள் காரணமாக எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மக்களின் பிரச்னைக்கான தீர்வுகள் மற்றும் தொழில்நுட்ப உதவி இவைதான் இப்போதைய தேவை" என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.2019-ஆம் ஆண்டில், 4.3 பில்லியன் மதிப்பிடப்பட்ட ஹேக்கிங் நடந்துள்ளது. 34 சதவிகிதம் இணையத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.. "2019 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் மீது ஒவ்வொரு 14 விநாடிகளிலும், ரான்சம்வேர் தாக்குதல் நடத்தப்பட்டது, அதே நேரத்தில் 71 சதவீத ஹேக்கிங் பணத்தை மையப்படுத்தி நடந்துள்ளது" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.



    "இந்த அச்சுறுத்தல்களிலிருந்து தப்ப மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்) பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அறிக்கை கூறுவது "சைபர் தாக்குதல்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன, இது தொடர்ந்து உயரும்’ என்றார் சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப இடர் ஆலோசகரான அக்‌ஷய் கார்கெல்.அவரது அறிக்கையின்படி, ஹேக்கிங் சார்ந்த சைபர் குற்றச் சம்பவங்கள் கடந்த ஆண்டை விட ஆறு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளன, மேலும் குற்றவியல் முறைகளை கணிப்பதற்கும் சைபர் கிரைம்களைக் குறைப்பதற்கும் தரவு பகுப்பாய்வு தேவை என்று தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.








Post a Comment

0 Comments