பாலினப்பாகுபாட்டை நீக்கி, பெண் குழந்தைகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் தேசிய அளவில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதேபோல், ஆண்டுதோறும் அக்.11ஆம் தேதி 'சர்வதேச பெண் குழந்தைகள் தினம்' ஐ.நா. சபையின் அறிவிப்புப்படி கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகளைப் பாதுகாத்து போற்றும் வகையில் கொண்டாடப்படும் தேசிய பெண் குழந்தைகள் தினம், தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்த்து போராடுவதற்குப் பெண்களுக்கு அதிகாரம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் அமைகிறது.
சமூகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்புரிமையை நிலைநாட்டவும், பாலியல் வன்முறையில் இருந்து பெண் குழந்தைகளை காக்கவும் சட்டங்கள் இயற்றபட்டு கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
0 Comments