💊 ஆஸ்பிரின் (Aspirinn) மருந்தைத் தயாரித்தவரான பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1868ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள லூட்ஸ்விக்ஸ்பெர்க் என்ற ஊரில் பிறந்தார்.
💊 சிறுவனாக இருந்த சமயத்தில் இவருடைய தந்தை மூட்டுவலியால் அவதிப்பட்டதை பார்த்து, படித்து முடித்ததும் அதற்கான மருந்தை 1897ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
💊 முதலில் பவுடராகத் தயாரிக்கப்பட்ட இவரது மருந்து பின்னர் மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. குறைந்த செலவில் தயாரிக்கும் முறையும் மேம்படுத்தப்பட்டு, குறைந்த விலையிலும் விற்கப்பட்டது. உலகம் முழுவதும் அதிவேகமாக இது பிரபலமடைந்தது.
💊 இதுவரை தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளிலேயே அதிகளவு வெற்றி பெற்றது ஆஸ்பிரின்தான் என்று கூறப்படுகிறது. (இம்மருந்து பொதுவாக சிறிய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாக பயன்படுகிறது).
💊 இந்த மருந்து நல்ல பலனையும் கொடுத்தது. இதன் வேதியியல் பெயர் அஸிடைல்சாலிசிலிக் (Acetylsalicylic) ஆசிட் ஆகும். மருத்துவ மேதை பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1946ஆம் ஆண்டு மறைந்தார்.
0 Comments