தள்ளிப்போகிறது நகர்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் : மே மாதம் நடக்க வாய்ப்பு

     தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் உள்ள, ஒன்பது மாவட்டங்களில், வார்டு வரையறை செய்யும் பணியை, மார்ச், 5க்குள் முடிக்க, வார்டு மறுவரையறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வார்டு வரையறை பணி, மார்ச் வரை நடக்க உள்ளதால், ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், மே மாதம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

     தமிழகத்தில், புதிய மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக, கடந்த மாதம் நடத்தப்பட்டது. ஜன., 2ல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள், பணிகளை துவக்கி உள்ளனர். சென்னை தவிர்த்து, தேர்தல் நடத்தப்படாமல் உள்ள, ஒன்பது மாவட்டங்களில், மூன்று மாதங்களுக்குள், தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

      இதற்கான ஆயத்தப் பணிகளை, மாநிலத் தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை பணியை, அதற்கான ஆணையம் துவக்கி உள்ளது. புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை தொடர்பான அறிவிப்பு, இன்று வெ ளியாக உள்ளது.புதிய வார்டு வரையறை வரைவு பட்டியல், நாளை வெ ளியிடப்படும்.

      இது தொடர்பாக, பிப்., 8 வரை, கருத்து தெரிவிக்கலாம்; அதன் மீது, பிப்., 15க்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின், வார்டு வரையறை வரைவு பட்டியல், துறை தலைமைக்கு அனுப்பப்படும். பிப்., 20ல், பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பை, ஆணையம் வெ ளியிடும். பிப்., 27 காலை, 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், மாலை, 3:00 மணிக்கு, செங்கல்பட்டு மாவட்டத்திலும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.


Post a Comment

0 Comments