உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.

   சென்னை: உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. 

     இன்று நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள் வெளியாக, நீண்ட நேரம் ஆகும் என தெரிகிறது. ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, உடனுக்குடன் முடிவுகள் வெளியாகும். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. 


      மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றிய தலைவர், ஒன்றிய துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு, மறைமுக தேர்தல், வரும், 11ம் தேதி நடக்கவுள்ளது. இதுகுறித்து, வெற்றி பெற்றவர்களுக்கு தெளிவுப்படுத்த, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின், tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்தல் முடிவுகள், உடனுக்குடன் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments