அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தீவிர நடவடிக்கை

    அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தீவிர நடவடிக்கை:

     அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு அமைச்சர் செங்கோட்டையன், சென்னை பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அதைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், அரசுப் பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச, அவர்களுக்கு 1000 ஆங்கில வார்த்தைகள் கற்றுக் கொடுக்கப்படும். இதன் மூலம் தமிழோடு சேர்த்து ஆங்கிலத்தையும் மாணவர்கள் சிறப்பாகப் பேசக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

     புத்தாண்டில் மாணவர்களுக்காக 72 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள், 7,200 ஸ்மார்ட் வகுப்பறைகள், 1000 பள்ளிகளில் நவீன ஆய்வகம் ஆகியவற்றை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டில் மாணவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும். அவர்கள் கல்வியாளர்களாகவும் மனிதநேயம் மிக்கவர்களாகவும் தேசபக்தி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அதே போல பெற்றோரை நேசிப்பவர்களாகவும் ஆசிரியர்களைக் குருவாக நினைப்பவர்களாகவும் மாணவர்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments