பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு சுற்றறிக்கை

     பொங்கல் பரிசு கடந்த 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டது. 4 நாட்கள் விநியோகம் நடந்தும், சில மக்கள் வாங்காததால் இன்றும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, இன்றுடன் பொங்கல் பரிசு வழங்குவது முடிவடைகிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில்,பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.




    அதில், " பொங்கல் பண்டிகைக்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தொக்கத் தொகை ஆயிரம் வழங்கப்படும். அனைத்து அரிசி பெறும் அட்டை குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ஆண்டு 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. விடுபட்ட அட்டைதாரர்களுக்கு 13ஆம் தேதி வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

       ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பெறவேண்டும் என்பதில் கருத்து கொண்டு 21ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. விடுபட்ட அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக்கடை வேலை நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையினை பெற்றுக்கொள்ளும் வகையில் தகுந்த அறிவுரைகளைச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments