அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிட முதல்வருக்கு கோரிக்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான குற்ற குறிப்பாணை நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், தலைமை செயலகத்தில், அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்து பேசினர். அதன்பின், சங்கத்தின் பொதுச் செயலர் செல்வம் கூறியதாவது:அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டம் நடந்து ஓராண்டு முடிந்துள்ளது.போராட்டத்தில் ஈடுபட்ட, 5,068 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது குற்ற குறிப்பாணை ஏற்படுத்தப்பட்டு உள்ளது; 1,500 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று, முதல்வர் பழனிசாமி கூறியதால், நல்லெண்ண அடிப்படையில், பணிக்கு திரும்பினோம். அதன்பிறகும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான குற்ற குறிப்பாணை, பணியிட மாற்ற நடவடிக்கை ரத்து செய்யப்படவில்லை.இதுதொடர்பாக, இன்று அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்து பேசினோம். எங்கள் கோரிக்கையை, முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை, முதல்வர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments