NEW PROFESSIONAL TAX - மாற்றியமைக்கப்பட்ட தொழில் வரி கட்டண விவரம்.

NEW PROFESSIONAL TAX - மாற்றியமைக்கப்பட்ட தொழில் வரி கட்டண விவரம்.




     தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 198 - B உட்பிரிவு - 13 ( 2 ) - ன் படி குறித்துரைக்கப்பட்ட வரி வீதமானது ஊராட்சி மன்றத்தால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்படுதல் வேண்டும் . மற்றும் அவ்வாறு திருத்தியமைக்கின்ற தேதிக்கு அடுத்து முன்பு விதிக்கப்பட்டிருந்தவாறான வரியில் நூற்றுக்கு இருபத்தைந்து விழுக்காட்டிற்குக் குறைவாகவோ , நூற்றுக்கு முப்பத்தைந்து விழுக்காட்டிற்கு அதிகமாகவோ இல்லாமல் வரியானது உயர்த்தப்படுதல் வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே இதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் , ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் உள்ள அரசு அலுவலர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் அரசு / தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 2018 - 19 - ஆம் இரண்டாம் அரையாண்டிற்கு கீழ்கண்ட திருத்திய விவரப்படி தொழில்வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும் .





                மேலும் , சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து ஊதிய விபரப்பட்டியல் பெற்று , தொழில் வரி நிர்ணயம் செய்து , வசூல் செய்யப்பட வேண்டும் . இத்தொகைகள் வசூல் செய்யப்பட்ட அடுத்த நாளே சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் இருசால் செய்யப்பட வேண்டும் என அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி . ஊ ) - களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





Post a Comment

0 Comments