போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய செந்தில்நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. போக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 2018-ல் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியல் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
தமிழக போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் 33 பேரை மட்டுமே நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டடிருந்தது. வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் 2018ல் நடந்த தேர்வில் பங்கேற்ற 1,328 பேருக்கும் புதிய விதிகளை வகுத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவும் போக்குவரத்துதுறைக்கு அதில் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
0 Comments