பள்ளிக்கல்வித்துறை 2019-2020 கல்வியாண்டு நாட்குறிப்பின்படி வேலை நாள்கள் விபரம்

         பள்ளிக்கல்வித்துறை 2019-2020 கல்வியாண்டு நாட்குறிப்பின்படி வேலை நாள்கள் விபரம்
------------------------------------------------------
2019 ஜூன் -19 நாட்கள்.

ஜூலை -23 நாட்கள்.

ஆகஸ்ட் -21 நாட்கள்.

செப்டம்பர் -16 நாட்கள்.

அக்டோபர் -22 நாட்கள்.

நவம்பர் -21 நாட்கள்.

டிசம்பர் -16 நாட்கள்.

2020ஜனவரி-20 நாட்கள்

   ஜூன் 2019 முதல் ஜனவரி 2020 முடிய பள்ளிக்கல்வி நாட்குறிப்பின்படி மொத்த வேலைநாட்கள்-158 நாட்கள் பணி செய்திருக்க வேண்டும்.
----------------------------------------------



20 பிப்ரவரி -22 நாட்கள்
இதில் 15.02.2020 மற்றும் 29.02.2020 ஆகிய இரு சனிக்கிழமைகள் பணிநாட்களில் அடங்கும்.

2020 மார்ச் -20நாட்கள் .
இம்மாதத்தில் பள்ளிக்கல்வி நாட்குறிப்பில் 25.03.2020 தெலுங்கு வருடப்பிறப்பு அரசு விடுமுறை குறிப்பிடவில்லை. இம்மாத வேலைநாட்களிலிருந்து 1 நாளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.மேலும் இம்மாதப்பட்டியலில் விடுமுறை நாட்கள் எதுவுமில்லாத நாட்களான 30.03.2020 திங்கள் மற்றும் 31.03.2020 செவ்வாய் பணிநாட்கள் விடுபட்டுள்ளது.இவ்விரு நாட்களை பணிநாளாக சேர்த்தால் மொத்தம் 21 பணிநாட்கள் வரும்.இது இம்மாதத்தில் 1 நாள் கூடுதலான பணிநாளாக வரும்.


2020 ஏப்ரல்-13 நாட்கள்.
இம்மாதத்தில் பட்டியலின்படி 10.04.2020 புனித வெள்ளி விடுமுறை நாளாகும்.
மேலும் இம்மாதத்தில் வரும் விடுமுறை நாட்களான 06.04.2020 (மஹாவீரர் ஜெயந்தி),மற்றும் 14.04.2020 (தமிழ்வருடப் பிறப்பு ஆகிய இரு அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில் விடுபட்டுள்ளன.

    மேலும் இம்மாதத்தில் பட்டியலின்படி 13 பணிநாட்களில் 2 அரசு விடுமுறை நாட்களைக் கழித்தோமானால் 11 நாட்கள் மட்டுமே பணிநாளாகக் கருத முடியும்.

     2020 பிப்ரவரி முதல் 2020 ஏப்ரல் முடிய (பிப்ரவரி 22+மார்ச் 21+ஏப்ரல் 11) ஆக மொத்தம் 54 நாட்கள் மட்டும் பணிநாள்.



     2019 ஜூன் முதல் 2020 ஏப்ரல் முடிய பள்ளிக்கல்வித்துறை நாட்குறிப்பின்படி மொத்த வேலை நாட்கள்.-213 நாட்கள்.

     உள்ளூர் விடுமுறை நாட்கள் -3 நாட்கள் விடப்பட்டதுபோக 210 நாட்கள் 2019-20 கல்வியாண்டில் பணிசெய்ய வேண்டும்.

     2019 ஜூன் முதல் 2020 ஜனவரி வரை நாம் 152 நாட்கள் அல்லது 153 நாட்கள் பணிசெய்து உள்ளோம்.பள்ளிகளுக்கு ஏற்ப மாறுபடும்.

     2019 ஜூன் முதல் ஜனவரி 2020 முடிய 152 நாட்கள் பணிசெய்தவர்கள் 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 முடிய பள்ளிக்கல்வி நாட்குறிப்பின்படி 54 நாட்கள் பணிசெய்தால் 152 +54=206 நாட்கள் பணிசெய்யவேண்டும். எனவே 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள 3 மாதங்களில் பட்டியலில் உள்ள 2 சனிக்கிழமை பணிநாள் போக மேலும் 4 சனிக்கிழமைகள் பணிசெய்தால் 210 பணிநாட்கள் நிறைவுபெறும்.

     2019. ஜூன் முதல் ஜனவரி 2020 முதல் 153 நாட்கள் பணிசெய்தவர்கள் 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 முடிய பள்ளிக்கல்வி நாட்குறிப்பின்படி 54 நாட்கள் பணி செய்தால் 153+54=207 நாட்கள் பணி செய்யவேண்டும்.எனவே 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள 3 மாதங்களில் 2 சனிக்கிழமைகள் பணிநாள் போக மேலும் 3 சனிக்கிழமைகள் பணிசெய்தால் 210 பணி நாட்கள் நிறைவுபெறும்.



    2019-2020 கல்வியாண்டில் மாணவர்களின் இறுதி வேலைநாள் 2020,ஏப்ரல் 20 ஆகும்.

   2019-2020 கல்வியாண்டில் ஆசிரியர்களின் இறுதி வேலைநாள் ஏப்ரல் 30 ஆகும்.

   ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.


Post a Comment

0 Comments