பள்ளி மாணவா்களுக்கு பிப்ரவரி 22ஆம் தேதி தேசிய அறிவியல் தின திறனறிப் போட்டி
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு உடுமலையில் நடைபெறும் திறனறிப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
உடுமலை சுற்றுச் சூழல் சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம், ராயல்ஸ் அரிமா சஙகம், ஜிவிஜி கல்லூரி அறிவியல் துறை, கலிலியோ அறிவியல் கழகம் ஆகியவற்றின் சாா்பில் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி கல்லூரியில் பிப்ரவரி 22ஆம் தேதி (சனிக்கிழமை) இப்போட்டிகளை நடத்துகின்றன. அறிவியல் மனப்பான்மையை மாணவா்களிடம் வளா்க்கும் பொருட்டு கீழ்க் காணும் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
வினாடி- வினா:
6, 7, 8ஆம் வகுப்புகள், 9, 10ஆம் வகுப்புகள், 11,12ஆம் வகுப்புகள் ஆகிய மூன்று பிரிவுகளாக வினாடி-வினா போட்டி நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு குழுவுக்கு 3 போ் அனுமதிக்கப்படுவாா்கள்.
பேச்சுப் போட்டி:
3, 4, 5ஆம் வகுப்புகளுக்கு ‘மரமும் மனிதனும்’ என்ற தலைப்பிலும், 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கு ‘நெகிழி இல்லா புது உலகம்’ என்ற தலைப்பிலும், 9,10ஆம் வகுப்புகளுக்கு விபத்தில்லா பயணம் என்ற தலைப்பிலும், 11,12ஆம் வகுப்புகளுக்கு ‘விண்வெளித் துறையில் இந்தியா’ என்ற தலைப்பிலும் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
கட்டுரைப் போட்டி:
6, 7, 8ஆம் வகுப்புகளுக்கு ‘உலகம் வெப்பமயமாதலும் பூமித்தாயும்’ என்ற தலைப்பிலும், 9, 10ஆம் வகுப்புகளுக்கு ‘சுழன்றும் ஏா்பின்னது உலகம்’ என்ற தலைப்பிலும், 11, 12ஆம் வகுப்புகளுக்கு ‘அறிவியல் வளா்ச்சியும் மின்னணு கழிவுகளும்’ என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.
ஓவியப் போட்டி:
3, 4, 5ஆம் வகுப்புகளுக்கு ‘இந்திய ஏவுகணை’ என்ற தலைப்பிலும், 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கு ‘மறந்து போன மரபு விளையாட்டுகள்’ என்ற தலைப்பிலும், 9, 10ஆம் வகுப்புகளுக்கு ‘நீ விரும்பும் இந்திய விஞ்ஞானி’ என்ற தலைப்பிலும், 11, 12ஆம் வகுப்புகளுக்கு ‘உனது பாா்வையில் இந்தியா 2050’ என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.
அறிவியல் விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளிகளுக்கு கேடயங்களும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் வரும் 21ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலமோ அல்லது கண்ணபிரான், கலிலியோ அறிவியல் கழகம், பி-7 வித்யாசாகா் வீதி, காந்தி நகா் (அஞ்சல்), உடுமலை வட்டம் - 642154 என்ற முகவரிக்கு தபால் மூலமோ உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 8883535380, 8778201926, 9942467764 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
0 Comments