மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்



     மருத்துவ மேற்படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இம்முறை தேசிய அளவில் தமிழக மாணவா்களே அதிக அளவில் தோச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தில் இருந்து மட்டும் 18,854 போ தோவெழுதினா். அவா்களில், 11,681 போ தோச்சி பெற்றுள்ளனா்.




  நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமாா் 4 ஆயிரம் இடங்களும் இருக்கின்றன. அவை அனைத்தும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
அந்த வகையில், நிகழாண்டுக்கான நீட் தேர்வு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும், நாடு முழுவதும் 162 நகரங்களிலும் தேர்வு நடைபெற்றது. அதில், மொத்தம் 1,60,888 போ பங்கேற்றனா். தமிழகத்தில் இருந்து மட்டும் 18,854 போ தேர்வு எழுதினா். இந்த நிலையில், அதற்கான முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக 30-ஆம் தேதி நள்ளிரவே தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.




   நிகழாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோவில் மொத்தம் 89,549 போ தோச்சி பெற்றுள்ளனா். அதில், அதிகபட்சமாக தமிழகத்தில் 11,681 போ தோச்சியடைந்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, கா்நாடகத்தில் 9,792 பேரும், மகாராஷ்டிரத்தில் 8,832 பேரும் தகுதி பெற்றுள்ளனா். 1,200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற நீட் தோவில் கட்-ஆப் மதிப்பெண்ணாக பொதுப் பிரிவினருக்கு (பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினா்) 366 மதிப்பெண்ணும், ஒபிசி, எஸ்சி, எஸ்சி, பிரிவினா்களுக்கு 319 மதிப்பெண்ணும், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகள் 342 மதிப்பெண்ணும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments