மத்திய பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறை. இப்போது அமலில் உள்ளவரி விதிப்பு முறையும் அமலில் இருக்கும்.

மத்திய பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறை. இப்போது அமலில் உள்ளவரி விதிப்பு முறையும் அமலில் இருக்கும்.



*.மத்திய பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையை மத்தியநிதியமைச்சர் நி்ரமலா சீதாராமன் அறிமுகம் செய்துள்ளார்.

*.அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், எளிமைப் படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட் டுள்ளது.

*.இதில் பல்வேறு வரி அடுக்குகள் (tax slab) அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் வரி கணிச மாக குறைக்கப்பட்டுள்ளது.

*.ஆனால், பல்வேறு வரி விலக்கு மற்றும் சலுகைகளை பெற முடியாது. குறிப்பாக, ஆயுள் காப்பீடு பிரீமியம், வருங்கால வைப்பு நிதி, வங்கி டெபாசிட், குழந்தைகளின் கல்விக் கட்டணம் உட்பட 80-சி பிரிவின் கீழ் பெறும் சலுகை (ரூ.1.5 லட்சம்) கிடைக்காது.




*.வீட்டுக் கடன் வட்டி (ரூ.2 லட்சம்), வீட்டு வாடகை, மருத்துவக் காப்பீடு மற்றும் நிலைக் கழிவு (ரூ.50,000) என்ற பெயரில் வழங்கப்படும் வரிச் சலுகைகளையும் பெற முடியாது.

*.புதிய வரி முறையின்படி ரூ.2.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. அதேநேரம் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்வரி செலுத்த தேவையில்லை.

*.ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையில் 10 சதவீதமும், ரூ.7.5. லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை யில் 15 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரையில் 20 சதவீதமும் ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் 25 சதவீதமும் வரி செலுத்தினால்போதுமானது.

*.ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30 சதவீத வரி செலுத்த வேண்டும்.

*.இதுகுறித்து நிர்மலா சீதா ராமன் கூறும்போது, “இப்போதுசுமார் 100 வகையான வரி விலக்கு மற்றும் தள்ளுபடிகள் அமலில் உள்ளன. இதில், புதிய வரி விதிப்பு முறையின் கீழ் 70 வகைகள் நீக்கப்படும்.




*.மற்றவை குறித்து மறு ஆய்வு செய்யப்படும். ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வருவாய் ஈட்டுபவர்கள் புதிய வரி விதிப்பு முறையை தேர்ந்தெடுத்தால் ரூ.78 ஆயிரம் வரை மிச்சப்படுத்த முடியும்” என்றார்.

*.அதேநேரம், இப்போது அமலில் உள்ள வரி விதிப்பு முறையும் அமலில் இருக்கும். வரி விலக்கு மற்றும் தள்ளுபடிகளை கைவிட விரும்பாதவர்கள் ஏற்கெனவே அமலில் உள்ள பழைய வரிவிதிப்பு முறையை தேர்ந் தெடுத்துக் கொள்ளலாம்.

*.இதன் படி, ரூ.2.5 லட்சம் வரை வரி விலக்கு உள்ளது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமும் வரி செலுத்த வேண்டும்.

*.தனிநபர்கள் இந்த 2 வரி விதிப்பு முறைகளில் எது தங் களுக்கு சாதகமாக இருக்குமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ள லாம்.

*.ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை.




*.எதிர்காலத்தில் வருமான வரிச் சலுகைகள் நீக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

*.மக்கள் மத்தியில் பணப்புழக் கத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் கையில் பணம் இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது.

*.அதை கருத்திற் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரியை குறைத்து சிரமங்களை நீக்க மத்திய அரசு விரும்புகிறது.

*.கடந்த செப்டம்பரிலேயே கார் பரேட் வரி விகிதங்கள் குறைக் கப்பட்டுவிட்டன.

*.தற்போது வரு மான வரி விகிதமும் குறைக்கப் பட்டிருக்கிறது. பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் முதலீடு தேவைப்பட்டால் ஒதுக்கப்படும்.

*.இந்தியாவைப் பொறுத்தவரை தனிநபர் வருமான வரி வி கிதம் குறைவாகவும் எளிமையாக வும் உள்ளது. நேர்மையான வர்களுக்கு மதிப்பளிக்கும் வகை யில் வருமான வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments