கடந்த ஆகஸ்ட் 2010க்குப் பிறகு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி , முறையான ஒப்புதலுடன் தமிழகத்தில் அரசுஉதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணி நியமனம் பெற்று , அவர்களது பணிக்கான தகுதி காண் பருவ ஆண்டுகளையும் கடந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வரும் 1747 ஆசிரியர்களின் பரிதாப நிலையை விவரிக்கிறது இக்கட்டுரை . . . . தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான நோடல் ஏஜென்சி எங்களையும் கா அமைப்பது தொடர்பான தமிழக அரசின் அரசாணை எண் : 181 , நவம்பர் 2011 மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைகள் குறித்த அரசாணை எண் . 90 மார்ச் 2012 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டன .
ஆனால் தமிழகத்தில் ஜுலை 2012ம் நாள் தான் முதன் முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது . அதன் முடிவுகள் ஆகஸ்ட் 2012 ல் வெளியானது . எனவே தமிழகத்தில் ஆகஸ்ட் 2012 வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் யாருமே இல்லாத ஒரு சூழல் , நியமிக்கப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய 2013ல் வெளியான அரசு உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 2013ம் நாள் தீர்ப்பு வழங்கியது . அதன் பிறகு உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் பல்வேறு மேல்முறையீடுகள் செய்யப்பட்டன . ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்ற ஆணைகள் மூலமே இந்த 1747 ஆசிரியர்களும் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் . இன்று வரை இது தொடர்கிறது .
தற்போது இவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஒரு பெண் ஐ . ஏ . எஸ் . அதிகாரி இயக்குநர்களை முடுக்கி விட்டுள்ளாராம் . இதனால் தங்களது பணிக்கு மீண்டும் ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சிக் கிடக்கிறார்கள் ஆசிரியர்கள் .
0 Comments