The Hindu - அன்பாசிாியா் விருதுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?​ வழிமுறைகள் வெளியீடு (DIRECT LINK TO APPLY)

The Hindu - அன்பாசிாியா் விருதுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?​ வழிமுறைகள் வெளியீடு (DIRECT LINK TO APPLY)



    ராம்ராஜ் காட்டன் & தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உடன் இணைந்து ’இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் அன்பாசிரியர் விருது: தபால் / இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்று விடாமல், திறன் வளர்ப்பு, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி வளர்த்து, பள்ளியையும் மேம்படுத்தும் ஆசிரியர்கள் பலர். ​அந்த நல்லடையாள ஆசிரியர்களை 'அன்பாசிரியர்' என்ற விருதோடு கவுரவிக்க பெருமையுடன் காத்திருக்கிறது 'இந்து தமிழ் திசை '.​ராம்ராஜ் காட்டன் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறையும் இந்த முன்னெடுப்புக்குத் துணை நிற்கிறது. ​'இந்து' தமிழ் திசை இணையத்தில் எழுதப்பட்ட 'அன்பாசிரியர்' கட்டுரைகளின் தொகுப்பைப் படிக்க இதை க்ளிக் செய்யவும்அன்பாசிரியர் தொகுப்புஅன்பாசிரியர்கள் குறித்த வீடியோவைக் காண இதை க்ளிக் செய்யவும்:அன்பாசிரியர் வீடியோஆசிரியர்கள் மேலே குறிப்பிட்ட கட்டுரைகள், வீடியோக்களைப் பார்த்துவிட்டு அன்பாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?​
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள்.​தொடர்ச்சியாகக் கற்பித்து வரும் தலைமை ஆசிரியர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.​​



என்ன செய்ய வேண்டும்?​'
இந்து தமிழ் திசை' இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.​அதனுடன் சுய விவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள்/ வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் அனுப்ப வேண்டும்.இணையம் வழியே அனுப்ப முடியாதவர்கள், விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து , ''அன்பாசிரியர் விருதுக் குழு, இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை, சென்னை- 2'' என்ற முகவரிக்கு, மேற்சொன்ன ஆதாரங்களின் நகலுடன் - பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வந்து சேரும்படி - அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம்.

    
     அதிகமான தகவல்கள் இருப்பின் தனிக்காகிதத்தில் எழுதி அனுப்பலாம்.​அன்பாசிரியர் தேர்வு முறை​விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்படும்.தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 'இந்து தமிழ் திசை' அலுவலத்தில் முதல் கட்ட நேர்காணல் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும். ஆசிரியர்கள், அவர்களின் மண்டலத்துக்கு ஏற்றபடி மேற்கண்ட நான்கு நகரங்களில் ஒன்றுக்கு நேரில் வரவேண்டியிருக்கும்.நேர்காணலுக்கு தன்னிடமுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், பிற விவரங்களை ஆசிரியர்கள் எடுத்துவரவேண்டும்.மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்தகல்வியாளர்கள் மூலம் இறுதிகட்ட நேர்காணல் பிப்ரவரி 16-ம் தேதி நடத்தப்படும். ​மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 37 பேருடன் புதுச்சேரி சேர்த்து, 38 பேருக்கு பிப்ரவரி 23-ம் தேதி 'அன்பாசிரியர்' விருது வழங்கப்படும்.

             விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: பிப்ரவரி 7, 2020.









Post a Comment

0 Comments