TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம்!
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் 196 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்க தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
196 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்க அரசுடன் ஆலோசித்து வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அளித்துள்ளது. 2017ல் நடைபெற்ற தேர்வில் முறைகேடு என எழுந்த புகாரில் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு 2017-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வினை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர். இதில் 2 ஆயிரம் பேர் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர்களில் 196 பேர் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்று இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு புகார் வந்தது.
இதையடுத்து விசாரணை நடத்தியதில் 196 தேர்வர்கள் 50 முதல் 100 மதிப்பெண் வரை கூடுதலாக பெற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த தேர்வு நடத்தப்பட்டது.
இதற்கிடையில் 196 பேர் பல லட்சம் கொடுத்து மதிப்பெண் அதிகமாக வாங்கி இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments