1 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் உத்தரவு - செய்தி வெளியீடு ( 25.03.2020 )

1 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் உத்தரவு - செய்தி வெளியீடு ( 25.03.2020 )

மாண்புமிகு முதலமைச்சர் திரு . எடப்பாடி K . பழனிசாமி அவர்களின் செய்தி அறிக்கை - நாள் 25 . 3 . 2020


தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது . நேற்று ( 24 . 3 . 2020 ) மாலை 6 . 00 மணி முதல் , குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது . அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று ( 25 . 3 . 2020 ) எனது தலைமையில் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டது . இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் திரு . K . சண்முகம் , இ . ஆ . ப . அவர்களும் , காவல்துறை தலைமை இயக்குநர் திரு . திரிபாதி , இ . கா . ப அவர்களும் , சென்னை மாநகரக் காவல் ஆணையாளர் திரு . ஏ . கே . விஸ்வநாதன் , இ . கா . ப . அவர்களும் , பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திரு . தீரஜ்குமார் , இ . ஆ . ப அவர்களும் பங்கேற்றனர் . இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன .


1 . 24.03.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் + 2 பொதுத்தேர்வு நடைபெற்றது . அத்தேர்வில் சில மாணவர்கள் , கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தங்களால் தேர்வெழுத செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததை கனிவோடு பரிசீலித்து , 24 . 3 . 2020 அன்று + 2 தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும் , இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டேன் .

2 . மேலும் , கொரோனா நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது . இதனால் , தமிழ்நாட்டில் 1 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களால் இறுதித் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும் , மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் , 1 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டேன் .


3 . தேநீர் கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதைத் தவிர்க்க , தமிழ்நாடு முழுவதும் உள்ள தேநீர் கடைகள் இயங்குவதற்கு , இன்று ( 25 . 3 . 2020 ) மாலை 6 . 00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது .

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை - 9

Post a Comment

0 Comments