பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
பிளஸ் - 2 விடைத்தாள் திருத்தும் பணி குறித்து 3 வாரங்களுக்கு பிறகு முடிவு அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் தகவல் . ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவுக்கு உட்பட்ட நம்பியூர் , எலத்தூர் பேரூராட்சிகள் மற்றும் தேசிய தரச்சான்றிதழ் பெற்ற நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையம் , ஊராட்சி ஒன்றிய அலு வலகம் ஆகிய இடங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் நேற்று திடீர் ஆய்வு செய்தார் .
பின் னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் 1 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரையான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது . பொதுமக்கள் அரசின் உத்தரவை கடைபிடித்து 21 நாட்கள் அரசுக்கு முழு ஒத்து ழைப்பு வழங்கவேண்டும் . காலம் , நேரம் கருதாது மக்கள் பணியாற்றி வரும் டாக்டர்கள் , செவிலியர்கள் , மருந்து வணி கர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகை நிருபர்க ளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கி றேன் .
மனநலம் குன்றியோர் , சாலையோரம் வசிப்பவர்கள் என அனைவருக்கும் உணவுகள் வழங்க தயார் செய்து கொண்டி ருக்கிறோம் . தொடர்ந்து அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது . தனியார் பள்ளிகள் கட்டணங்களை செலுத்த கட்டாயப்படுத்தப்படுவது சம்பந்த மாக இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கப்பெற வில்லை .
அதுபோல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றறிக்கைகள் வழங்கப்படும் . தொழில் வரி , சொத்து வரி செலுத்துவது குறித்து முதல் - அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் . 21 நாட்கள் ( 3 வாரங்கள் ) தடை உத்தரவு முடிந்த பிறகு தான் பிளஸ் - 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் . இவ்வாறு அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் கூறினார் .
0 Comments