தமிழகம் முழுவதும் 8 , 600 பள்ளிகளில் சுற்றுச்சுவர் சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
சட்டசபையில் , தி . மு . க . உறுப்பினர்
டி . ஆர் . பி . ராஜா ( மன் னார்குடி ) , ' மன்னார்குடி ஒன்றியம் , வடபாதி பள்ளி கட்டி டங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது . அங்கே வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் . கஜா புயலால் ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் பள்ளிக்கட்டிடம் முழுவது மாக சேதம் அடைந்தது . நீடாமங்கலத்தில் உயர்நிலைப்பள் ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்து வருகிறது . ராயபுரம் ஊராட்சியில் வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் வ மரத்திற்கு அடியில் இருந்து படித்து வருகிறார்கள் . எனவே அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டு நடவடிக்கை ல எடுக்க வேண்டும் ' என்றார் .
இதற்கு அமைச்சர் கே . ஏ . செங் கோட்டையன் பதில் அளித்து கூறியதாவது : நீடாமங்கலத்தில் இருக்கின்ற பள்ளிகள் சுற்றுச்சுவர்கள் சரியாக இல்லை , சுற்றுச்சுவர் இல்லாததால் அங்கே பல தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று உறுப்பினர் கூறியுள்ளார் .
உள்ளாட்சித்துறை அமைச்சரால் இந்த ஆண்டு 1 , 600 உயர்நிலைப்பள்ளி , மேல் நிலைப்பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் அமைப்பதற்கும் , 7 ஆயிரம் நடுநிலைப்பள்ளி , தொடக் கப்பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கும் நிதி வழங்குவ தற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இந்த நிதியை பயன்படுத் தும்போது , பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் இருக்காது . மேலும் ஸ்மார்ட் கிளாஸ் இந்த ஆண்டு 7 , 500 பள்ளிகளுக்கு கொண்டு வருவதற்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது . எனவே உறுப்பினர் குறிப் பிடும் பள்ளிகளுக்கும் நிதி வழங்கப்படும் . இவ்வாறு அவர் கூறினார் .
0 Comments