பிரசவத்திற்கு சில மணி நேரம் முன்பு வரை கரோனா பரிசோதனை கருவியை கண்டுபிடிக்க உழைத்த பெண் – குவியும் பாராட்டுகள்
தன்னுடைய பிரசவத்திற்கு சில மணி நேரம் முன்பு வரை கூட இந்தியாவின் முதல் கரோனா பரிசோதனை கருவியை கண்டுபிடிப்பதில் செலவிட்டுள்ளார் புனேவின் மைலேப் நிறுவனத்தை சேர்ந்த மினல் போஸ்லே.
பிரசவத்திற்கு சில் மணி நேரங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் முதல் கரோனா பரிசோதனை கருவியை கண்டுபிடிக்க உழைத்துள்ளார் புனேவை சேர்ந்த கர்ப்பிணி பெண் மினல் போஸ்லே.
இந்தியாவின் முதல் கரோனா பரிசோதனை கருவியை சில வாரங்களுக்கு முன்னர் கண்டுபிடித்தது புனேவை சேர்ந்த மைலேப் டிஸ்கவரி என்ற நிறுவனம். அந்த கருவியை இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகரித்ததோடு, அதற்கான உரிமத்தையும் அந்த நிறுவனத்திற்கு கொடுத்தது.
அந்த உரிமம் மூலம், அந்த கருவியை மைலேப் டிஸ்கவரி நிறுவனத்தினர் விற்பனை செய்துகொள்ளலாம். புனே நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கருவியை வைத்து குறைந்த நேரத்திலேயே கரோனா பரிசோதனை மேற்கொண்டுவிடலாம் என தெரிவித்துள்ளனர்.
கரோனா பரிசோதனை கருவி
மேலும், கரோனா பரிசோதனைக்காக தற்போது 4500 ரூபாய் வசூல் செய்யப்பட்டுவருவதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவி மூலம் பரிசோதனை செய்துகொண்டால் 1800 ரூபாய் மட்டுமே செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பெருமைப்படுத்தும் இந்த கண்டுபிடிப்புக்கு பின்னால் இருப்பவர் ஒரு பெண். மினல் போஸ்லே என்பவர், மைலேப் டிஸ்கவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர். வைராலஜியில் இவர் தேர்ந்தவர் என்பதால் கரோனா பரிசோதனை கருவியை உருவாக்கும் பணியை மினல் போஸ்லே தலைமையிலான குழுவிடம் ஒப்படைத்தது மைலேப் டிஸ்கவரி நிறுவனம்.
பல நாட்கள் இந்த கண்டுபிடிப்புக்காக பாடு பட்ட மினல் போஸ்லே, தன் பிரசவத்திற்கு சில மணி நேரம் முன்பு கூட அந்த கருவிக்காக உழைத்துள்ளார். தற்போது பெங்களூரு, மும்பை, டெல்லி, கோவா போன்ற நகரங்களுக்கு இவர்கள் கண்டுபிடித்த கரோனா பரிசோதனை கருவி அனுப்பப்பட்டுவருகிறது. கூடிய விரைவில் இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் கரோனா பரிசோதனை கருவி கண்டுபிடிப்புக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது அனைவரையும் நெகிழச்செய்துள்ளது. தற்போது மினல் போஸ்லேவுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.
0 Comments