அங்கீகாரமில்லா நர்சரி, பிளே ஸ்கூல்: ஏப்ரல் முதல் இழுத்து மூட முடிவு
அங்கீகாரம் இல்லாத, நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பள்ளிகளை, வரும் கல்வி ஆண்டில் மூட, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையில், பள்ளிக் கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக்குலேஷன் இயக்குனர் போன்ற அதிகாரிகளின் கீழ், பள்ளிகள் செயல்படுகின்றன.
தனியார் மெட்ரிக் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற வேண்டும்.மூலைக்கு மூலைஅரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் போன்றவை, பள்ளிக் கல்வி இயக்குனரின் அங்கீகாரம் பெற வேண்டும்.தொடக்க, நடுநிலை, நர்சரி மற்றும் இளம் மழலையர் பள்ளிகள், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெறுவது கட்டாயம்.இந்நிலையில், நர்சரி மற்றும் இளம் மழலையர் பள்ளிகள், மூலைக்கு மூலை பெட்டிக்கடைகள் போல செயல்படுகின்றன. அவற்றில் பல பள்ளிகள், அரசு துறையில் எந்த அனுமதியும், அங்கீ காரமும் இல்லாமல் செயல்படுகின்றன.பல பள்ளிகள் சிறிய கட்டடங்களிலும், வீடு களிலும் பாதுகாப்பின்றி செயல்படுகின்றன.
அரசின் சுகாதார சான்றிதழ், பொதுப்பணி துறையின் கட்டட உறுதி சான்றிதழ், தீயணைப்பு சான்றிதழ் போன்றவற்றை கூட, பல பள்ளிகள் பெறுவதில்லை.அவற்றை ஒழுங்குபடுத்தவும், அங்கீகாரமில்லாத பள்ளிகளின் செயல்பாட்டுக்கு முடிவுகட்டவும், பள்ளிக் கல்வித் துறைதிட்டமிட்டுள்ளது.முதற்கட்டமாக, தமிழகம் முழுவதும் நர்சரி மற்றும் 'பிளே ஸ்கூல்' எனப்படும், இளம் மழலையர் பள்ளிகளின் அங்கீகாரம்மற்றும் அரசின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய, வட்டாரக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நடவடிக்கை மாவட்ட வாரியாக முதன்மைக் கல்வி அலுவலர்களின் மேற்பார்வையில், இந்தப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக்கு பின், அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியல், தொடக்கக் கல்வி இயக்குனரகத்திடம் வழங்கப்படும்.அதிலுள்ள பள்ளிகளை, ஏப்ரல் முதல் நிரந்தரமாக மூடவும், அவற்றின் நிர்வாகிகள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக, தொடக்கக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments