தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு

தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு


   தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. என்பிஆர் கணக்கெடுப்பின் போது எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள என்பிஆரில் கூடுதலாக 3 கேள்விகள் உள்ளன. இது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு பதில் அளிக்காததால் என்பிஆர் நிறுத்தப்பட்டுள்ளது.


  தமிழகத்தில் என்பிஆர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகின்ற ஏப்ரல் 01-ம் தேதி தமிழகத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் புதியதாக கொண்டுவந்து என்பிஆரில் புதியதாக மூன்று கேள்விகள் வந்து உள்ளது.அந்த மூன்று கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்காத நிலையில் தமிழகத்தில் என்பிஆர் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments