மாவட்டந்தோறும் பல்வேறு அரசு , தனியார் துறையினரைக் கொண்ட நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி

நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி 

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்டந்தோறும் பல்வேறு அரசு , தனியார் துறையினரைக் கொண்ட * நெருக்கடி கால மேலாண்மைக் குழு ' அமைக்கப்படும் என்று முதல் வர் பழனிசாமி அறிவித்துள்ளார் .

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை : மக்களின் நடமாட்டத்தைக் குறைத்து கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . பிற மாநில தொழிலாளர்களுக்கு இருப்பிடம் , உணவு , மருத்துவ வசதிகள் அனைத்தையும் முன்பு வேலை பார்த்த நிறுவனங்களே செய்ய வேண்டும் . இதை மாவட்ட ஆட்சி யர்கள் உறுதிசெய்ய வேண்டும் .



பள்ளி , கல்லூரிகள் , தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழி யர்களின் சம்பளப் பட்டியலை தயாரிக்க , சம்பந்தப்பட்ட நிறுவனங் களின் 2 அல்லது 3 ஊழியர்களுக்கு மட்டும் மார்ச் 30 , 31 , ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாட்களுக்கு அனு மதி அளிக்கப்படும் .

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் தொழில் வர்த்தக சபை , தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர்கள் , மருத்துவ வல்லுநர்கள் , மருந்து தயாரிப்பாளர்கள் , வேளாண்மை , கால்நடைப் பராமரிப்பு , மீன்வளம் ஆகிய துறைகளின் அரசு , தனியார் துறை முகவர்கள் , உணவுத் தயாரிப் பாளர்கள் , உணவு விநியோகஸ் தர்கள் , அரசுசாரா அமைப்பினர் , நுகர்வோர் பிரதிநிதிகள் ஆகியோர் களை உறுப்பினர்களாகக் கொண்ட * நெருக்கடிகால மேலாண்மைக் குழு ' அமைக்கப்படும் .



கரோனா நோய் சமூக பரவலாக மாறுவதைத் தடுக்க , மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் சுற்று வட்டாரப் பகுதிகள் , ' கட்டுப்படுத் தப்பட்ட பகுதிகளாக வரையறுக்கப் பட்டு தீவிர நோய் தடுப்பு நட வடிக்கைகள் கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்படுகிறது .

முதியோர் , சர்க்கரை , உயர் ரத்த அழுத்த நோயாளிகள் , நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ள வர்களை வீட்டில் உள்ள மற்ற நபர்கள் தொடர்பில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . வரும் 2 மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1 . 5 லட்சம் தாய்மார்கள் கண்டறியப்பட்டுள்ளனர் .



அவர் களுக்கு தேவையான உதவிக்கு 102 , 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் . சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டவர்களின் விவரங் களை சுகாதாரத் துறைக்கு அம் மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டும் .

தமிழகத்தின் சில இடங் களில் , குறிப்பாக மீன் அங்காடி , இறைச்சி , காய்கறி கடைகளில் சமூக விலகல் முழுமையாக கடை பிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சி யர்கள் உறுதிப்படுத்த வேண்டும் .

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார் .


Post a Comment

0 Comments