பகுதிநேர ஆசிரியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் முதல்வர் உத்தரவிட கோரிக்கை

பகுதிநேர ஆசிரியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் முதல்வர் உத்தரவிட கோரிக்கை
பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பகுதிநேர ஆசிரியர்கள்
கூட்டமைப்பு பாராட்டு.


   கொரோனா வைரஸ் பேரழிவில் இந்திய மக்களை பாதுகாக்க சிறப்பாக நடவடிக்கை எடுத்துவரும் பாரதப்பிரதமர் மோடி அவர்கள் பாடுபட்டு வருகிறார். அதைப்போலவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் தமிழ்நாட்டு மக்களை பாதுபாக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு மக்களுக்கு ஆபத்பந்தாவனாக செயல்பட்டு வருகிறார்.

  இந்த மனிதநேய நடவடிக்கைகளை பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டடைப்பு பாராட்டி வருகிறது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியது:-


   கொரோனா வைரஸ் மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இந்திய மக்களை பாதுகாக்க பாரத பிரதமர் மோடி அவர்கள் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் பெரும் அழிவு தடுத்து  நிறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அவர்கள் கொடிய நோய் பரவாமல் தடுக்க அனைத்து மாநில முதல்வருக்கும் தேவையான நிதியும் வழங்கி உதவி வருகிறார். இது மிகவும் பாராட்டத்தக்கது. தமிழக முதல்வர் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் “ எனக்கு மக்கள் நலன் தான் முக்கியம் அடுத்து ஆட்சிக்கு வர நான் செய்ய வரவில்லை, இந்த பழனிச்சாமி அம்மாவை போல் மக்களை பாதுகாத்தார் என்று மக்களின் மனதில் இடம் பெற்றாலே போதும் என முதல்வர் எடப்பாடியார் “ அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி இந்த கொடிய நோய் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவசரகால நடவடிக்கைகளை சிறப்புடன் கையாண்டு வருகிறார். கிட்டதட்ட 4ஆயிரம் கோடி அளவிற்கு நிதியும் ஒதுக்கி, மேலும் அத்தியாவசியப் பொருட்களும் மக்களுக்கு தேவையான அளவு கிடைக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  இதனை தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மனதார பாராட்டுகிறது.


   இந்த இக்கட்டான நேரத்தில் 11 ஆயிரத்திற்கும் மேலான பகுதிநேர ஆசிரியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் எவ்வித காலதாமதமும் இல்லாமல் விரைந்து கிடைக்க முதல்வர் அவர்கள் நேரடி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். 144 தடை உத்தரவு காரணமாக 21 நாட்கள் பள்ளிகள் நடைபெறாத சூழலில் பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளம் முதல்வர் உத்தரவிட்டால் மட்டுமே விரைவில் கிடைக்கும். பொதுவாக எப்போதுமே பகுதிநேர ஆசிரியர்கள் சம்பளம் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது, அதனை ஒரு புகாராக வெளிப்படுத்தியதில்லை. ஆனால் இம்முறை இதனை முதல்வருக்க தெரியப்படுத்தி ஆகவேண்டிய கட்டயாத்தில் உள்ளோம்.


    மேலும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமுலில் இருப்பதால் வருகின்ற ஏப்ரல்
மாதம் ஊதியமும் எவ்வித தடையுமின்றி வழங்கவும் முதல்வர் உரிய உத்தரவுகளை கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்து உதவிட வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் மே மாதம் ஊதியம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கல்வித்துறையினர் மறுத்து வருகின்றனர். இம்முறை இந்த சோதனையான காலத்தில் மே மாதம் ஊதியத்தையும் கருணையுடன் முதல்வர் வழங்கவும் உத்தரவிட்டால் அனைவரும் சிரமமின்றி உணவு, வாடகை போன்ற செலவுகளை மேற்கொள்ள முடியம். எனவே மக்கள் காவலராக உருவெடுத்து வரும் முதல்வர் அவர்கள் இந்த பகுதிநேர ஆசிரியர்கள் கனிவான கோரிக்கையினை கவனிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புக்கு
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் நம்பர் 9487257203

Post a Comment

0 Comments