மாணவர்களை விமானம், ரயிலில் அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர்

    சிவகாசி அருகே விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தவர்களுக்கு சொந்த செலவில் சுற்றுலா மாணவர்களை விமானம், ரயிலில் அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர் 
    சிவகாசி அருகே தொடக்கப் பள்ளி மாணவர்கள் 20 பேரை தனது சொந்த செலவில் ரயில், விமானம் மூலம் தலைமை ஆசிரியர் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மங்கலம் கிராமத் தில் அரசு தொடக்கப் பள்ளியில் 64 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் 20 மாணவர் களையும் 4 ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர் ஜெயச்சந் திரன் தனது சொந்த செலவில் சென்னைக்கு சுற்றுலா அழைத் துச்சென்று, சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வந்தார். இது குறித்து தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் கூறியதாவது: 

    மாணவர்கள் பெற்றோருடன் திருமணம் மற்றும் உறவினர்கள் இல்ல விழாக்களுக்குச் செல்வதற்காக அடிக்கடி விடுமுறை எடுப்பது வழக்கம். ஆனால், விடுமுறை ஏதும் எடுக்காமல் பள்ளிக்கு வரும் 5-ம் வகுப்பு மாணவர்கள் ரயில் மற்றும் விமானத்தில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என அறிவித்தேன். 
    அதன்படி, கடந்த 4 மாதங்களாக 5-ம் வகுப்பு மாணவர்கள் 20 பேரும் விடுப்பு எடுக்காமல் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். உடல்நிலை பாதிப்பு போன்ற தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டுமே ஓரிரு மாணவர்கள் விடுமுறை எடுத்தனர். மாணவர்களை ஊக்கப்படுத்து வற்காக பிப்.28-ம் தேதி இரவு 5-ம் வகுப்பு மாணவர்கள் 20 பேர் மற்றும் ஆசிரியர்கள் 4 பேரையும் எனது சொந்த செலவில் ரயில் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்றேன். 

    அங்கு வாடகை வேன் பிடித்து இரு நாட்கள் சென்னை யைச் சுற்றிப் பார்த்தோம். அதன் பின் எனது சொந்த செலவில் சென்னையிலிருந்து மதுரைக்கு மாணவர்களையும் ஆசிரியர்களை யும் விமானத்தில் அழைத்து வந்தேன். கிராமப்புற மாணவர்கள் பலர் ரயிலில்கூட சென்றதில்லை. ரயில் மற்றும் விமானத்தில் பயணித்த போது மாணவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கும் மன நிறைவாக இருந்தது. 

     இந்தச் சுற்றுலாவுக்கு சுமார் ரூ.1.20 லட்சம் வரை செலவானது. ஆனாலும், அதில் ஒரு மனநிறைவு கிடைத்தது. மாணவர்களுக்கு இப்பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத முதல் விமானப் பயணமாக அமைந்தது. இதேபோன்று மற்ற வகுப்பு மாணவர்களும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் அவர்களையும் சுற்றுலா அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளோம். 

    மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, முதலில் அவர்களை விடுப்பின்றி பள்ளிக்கு வரவழைப்பதே முதல் வெற்றி. இவ்வாறு தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் கூறி னார்.

Post a Comment

0 Comments