JEE Main April 2020: ஜெஇஇ தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 12 கால அவகாசம் நீட்டிப்பு
ஜெஇஇ 2020 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி முடிவடைந்த நிலையில் தற்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர வேண்டுமெனில் ஜெஇஇ (JEE) எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2020-21 கல்வியாண்டிற்கான ஜெஇஇ மெயின் தேர்வு, வரும் ஏப்ரல் 5 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. என்டிஏ தேசிய தேர்வு முகமையின் கட்டுப்பாட்டில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
இதனிடையே, JEE Main April 2020 தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜெஇஇ தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://jeemain.nta.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மார்ச் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments