சென்னையில் கரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதிகளாக 22 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதுவரை 411 பேர் கரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். சென்னையில் இதுவரை 26 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அண்ணாநகர், கோடம்பாக்கம், திருவிக நகர், அடையாறு உள்ளிட்ட 13 மண்டலங்களில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், 22 பகுதிகளை கரோனா பரவும் அபாயமுள்ள பகுதிகளாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தற்போது அந்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில், தற்போது போலீஸார் மற்றும் சுகாதாரத்துறை அமைப்பினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே செல்ல அனுமதி பெற்றபிறகே செல்லவேண்டும் எனவும் வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் இந்த பகுதிக்குள் நுழைய அனுமதி கிடையாது என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சீல் வைக்கப்பட்ட பகுதிகள்:
எண்ணூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டை, பெரம்பூர், அரும்பாக்கம், அண்ணா நகர், அமைந்தகரை, புரசைவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், போரூர், ஆலந்தூர், திருவான்மியூர், மடிப்பாக்கம், பனையூர், கோட்டூர்புரம்.
0 Comments