மத்திய அரசு அறிவிப்பு - இன்று முதல் வங்கிகள் மாலை 4 மணி வரை செயல்படும்
கரோனா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவிவருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே கடைகள் செயல்படும் எனவும், அதுவும் சமூக இடைவேளையை மக்கள் பின்பற்றுவதை கடை உரிமையாளர்கள் உறுதிசெய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கும் வங்கி பணியாளர்களுக்கும் கரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட, அவசர தேவைகளுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட்டது.
இந்நிலையில், தற்போது அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கரோனா நிவாரண நிதிகளை மக்கள் நேரடியாக வங்கிகளிலேயே பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments