கொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை - மத்திய அரசு
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தாலும்கூட, இந்தியாவில் அதன் பரவல் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்றும், இந்திய மருந்துகள் துறை தொடர்ந்து மருந்து வினியோகத்தை கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக பிரச்சினைகள் எழுகிறபோது பல்வேறு துறைகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் துணையோடு தீர்வுகளையும் காண்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதில் இருந்து மருந்துகள் உற்பத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் நேற்று உறுதி செய்துள்ளது.
தவிரவும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையமும் போதுமான அளவுக்கு மருந்துகளை தயாரித்து இருப்பு வைக்குமாறும் மருந்து உற்பத்தி நிறுவனங்களை அறிவுறுத்தி வருகிறது.
0 Comments