நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில், புத்தகம், மின் விசிறிக் கடைகள் மற்றும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கடைகள் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், சில சேவைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் தளர்வு செய்து சமீபத்தில் அறிவித்திருந்தது.
இது தொடர்பான தனித்தனி உத்தரவுகளில், இதுவரை வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட சேவைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சில கேள்விகளைப் பெற்ற பின்னர் சில கடைகளை திறக்க அனுமதிக்கும் படியான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதன்படி, மாணவர்களுக்கான கல்வி புத்தகங்களின் கடைகள், மின்விசிறி கடைகள் முழு அடைப்பின் போது திறக்க அனுமதிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
ஊரடங்கின் இந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் நலன் கருதி இந்த சேவைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரவுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், படுக்கையறை உதவியாளர்கள் மற்றும் வீடுகளில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு வழங்குநர்கள் மற்றும் ப்ரீபெய்ட் மொபைல் இணைப்பிற்கான ரீசார்ஜ் செய்வோர் உள்ளிட்ட பொது பயன்பாடுகள் சேவைகளை வழங்குவோர்களுக்கும் முழு அடைப்பின் போது செயல்பட அனுமதி அளிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
நகர்ப்புறங்களில் அமைந்துள்ள ரொட்டி தொழிற்சாலைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மாவு ஆலைகள், பருப்பு ஆலைகள் போன்ற உணவு பதப்படுத்தும் பிரிவுகள் முழு அடைப்பு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்படும். இருப்பினும், அலுவலகங்கள், பட்டறைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியது.
0 Comments