கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கை உடனடியாக திரும்பப் பெற முடியாது

    கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கை உடனடியாக திரும்பப் பெற முடியாது - எதிர்கட்சிகளுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல்

      கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வந்ததை அடுத்து மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். ஆனால், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று 8 மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. அதே வேளையில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மேலும் நான்கு வாரங்களுக்கு மூட மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை வைத்திருக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி இன்று கொரோனா மற்றும் ஊரடங்கு தொடர்பாக வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஊரடங்கை அரசு நீட்டித்தால், ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

     மேலும், ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும்” என்று பிரதமர் மோடியும் அவர்களிடம் பேசியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான யுத்தம் நம்மை ஒன்றினைத்துள்ளது. கொரோனா வந்தது முதல் வெளியேறுவது வரை நாம் போராட வேண்டியது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அப்போது, ஊரடங்கு உடனடியாக திரும்ப பெறப்படாது என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர்கள் உடனான ஆலோசனையின் போது, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி கருத்துகளை கேட்டறிவார். முதல்வர்கள் உடனான ஆலோசனைக்குப் பின் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக வருகிற ஞாயிற்றுகிழமை அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IMG-20200408-WA0007

Post a Comment

0 Comments