மத்திய பாடத்திட்டத்தின் கீழ் (சி.பி.எஸ்.இ.) 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டு ‘பாஸ்’ செய்யப்படுவார்கள். இதற்கான உத்தரவை, சி.பி.எஸ்.இ. நிறுவனத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் போக்கிரியல் நிஷாங், பிறப்பித்து இருக்கிறார். இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்து இருக்கிறார்.
கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், 9 மற்றும் 11-ம் வகுப்பினர், வகுப்பறையில் நடைபெறும் தேர்வுகளின் (‘அசஸ்மென்ட்’) அடிப்படையில் இதுவரை தேர்ச்சி செய்யப்படுகிறார்கள். அதில் தேர்ச்சி அடையாதவர்கள் இந்த முறை ‘ஆன்லைன்’ மூலம் தேர்வு எழுத முடியும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
CBSE Standard 1 to 8 All students pass
All students studying in Class 1 to 8 under the Central Curriculum (CBSE) will be passed this year. The order was issued by CBSE. Ramesh Pokriyal Nishang, Union Minister of Human Resources Development, has given birth to the company. He has also posted this on his Twitter page.
Considering the state of affairs in the country by Corona, this decision has been made and the 9th and 11th grade students have been assessed so far based on classroom assessment. The announcement also stated that those who do not qualify will be able to write the exam online.
0 Comments