தமிழகத்தின் 38-வது மாவட்ட மாக மயிலாடுதுறை உதயமாகி யுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த ஆண்டு தொடக்கத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், திருநெல்வேலியை பிரித்து தென்காசி, விழுப்புரத்தை பிரித்து கள்ளக் குறிச்சி, வேலூரைப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல் பட்டு என புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது. இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்' என்று கடந்த ஏப்.24-ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.அந்த அறிவிப்பை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments