10-ம் வகுப்பு பொதுத் தேர்விள் மாணவர்கள் 25 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் போதும். அவர்கள் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கள்வித்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 10-ம் வகுப்புத் தேர்வு குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் நடத்தப்படவில்லை. பெற்றோர் மற்றும் மாற்று அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதால் 10-ம் வகுப்புத் தேர்வு நடத்தப்படும் தேதி அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த மாதம் 12-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்தார். இந்த தேர்வு ஜூன்25-ம் தேதி வரை நடைபெறுகிறது.'காரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களுக்கு முழுமையாக பாடம் நடத்தி முடிக்கப்படவில்லை என்று கல்வி நிறுவனங்கள் தெரிவித்ததையடுத்து 10 -ம் வகுப்புத் தேர்வு தாமதமாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
10-ம் வகுப்புத் தேர்வை மாநிலம் முழுவதும் உள்ள 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் எழுதுகிறார்கள். இதுகுறித்து பள்ளிக் கள்வித்துறை மூத்த அதிகாரி கூறியிருப்பதாவது:- மத்திய அரசு 10-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டதையடுத்து தமிழக அரசு 10-ம் வகுப்புக்கான தேர்வை கட்டாயமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. தமிழ்,ஆங்கிலம் நீங்கலாக, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வை நடத்த மத்திய அரசு எங்களை அனுமதிக்கவில்லை. ஆகவே, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் போது தேர்ச்சிப் பெறுவதற்கான மதிப்பெண் சதவீதத்தை குறைப்பது என்று மறுபரிசீவனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. 10-ம்வகுப்புத் தேர்வுஎழுதும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றனர் என்று தமிழக அரசு அறிவிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
புதிய வினாத்தாளை மீண்டும் தயாரிப்பது மிகவும் கடினமான காரியம். இதற்கு ஒரே வழி பாடங்களை குறைப்பது தான். ஆகவே அனைத்து பள்ளி நிர்வாகங்களும் 10-ம் வகுப்புத் தேர்வை நடத்தியே ஆகவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தேர்வுக் கூடத்திற்கு வந்து தேர்வு எழுதலாம். ஒரு சில தனியார் பள்ளிகள் குறிப்பாக, நகரங்களின் உள்ள பள்ளிகள் ஆல்பாஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அனைத்துப் பாடங்களையும் இணையதளம் மூலம் நடத்தி முடித்துவிட்டதால் ஆல்பாஸ் திட்டத்திற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவிள்லை. இருப்பினும் 25 சதவீத மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள் என்று அறிவிக்கப்படுவார்கள். இவ்வாறு பள்ளிக் கள்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
0 Comments