பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்க உள்ளது

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்க உள்ளது. இதற்கான மையங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச்சில் நடந்தன. அதில், பிளஸ் 2 தேர்வுகள் அனைத்தும்முடிந்து விட்டன; பிளஸ் 1க்கு மட்டும், ஒரு பாடத்துக்குதேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளது.


   இந்நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கால், கல்வித் துறையில், அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதனால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்த பணி, அடுத்த வாரம் துவங்க உள்ளது; இதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன.மாவட்ட வாரியாக, விசாலமான, இட வசதி உள்ள பள்ளிகள், விடை திருத்தும் மையங்களாக அமைக்கப்பட உள்ளன.


  சோப்பால் கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்தல் போன்ற, கொரோனா வைரஸ் ஒழிப்பு நடைமுறைகளும், விடைத்தாள் திருத்த மையங்களில், கடைப்பிடிக்கப்பட உள்ளன.


   அதேபோல, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், முகக் கவசம் வழங்கப்படுவதுடன், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே, மையங்கள் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments