ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் - முழு விவரம்

   பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


  • தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் - நிதியமைச்சர்
  • பொருளாதாரம் கட்டமைப்பு, தொழில்நுட்பம் போன்ற ஐந்து தூண்களை உருவாக்குவதற்காக இந்த ஆத்ம நிர்பர் பாரத் கொண்டு வரப்பட்டுள்ளது
  • ஆத்ம நிர்பர் பாரத் - தமிழில் "சுயசார்பு பாரதம்" ஆகும்
  • மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே இந்த கொரோனா என்கிற பேரிடர் வந்திருக்கிறது
  • 41 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் பிரதம மந்திரியின் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது
  • 71,700 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பல்வேறு மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
  • ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மை கொண்ட யோஜனா வழங்கியுள்ளது
  • 15 திட்டங்களில், 6 திட்டங்கள் சிறு குறு தொழில் துறைக்கானது- நிர்மலா சீதாராமன்
  • அக்டோபர் மாதம் வரை 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் வழங்கப்படும்
  • கடன் பெறும் சிறு குறு நிறுவனங்கள் முதல் 1 ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லை
  • அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதாரம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவோம்
  • 52,606 கோடி ரூபாய் 41 கோடி ஜன் தன் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது
  • 69 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது
  • 18 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி, மக்களுக்கு திரும்ப தரப்பட்டுள்ளது
  • வருமான வரி பிடித்தம் திரும்ப செலுத்தபட்டதன் காரணமாக 14 லட்சம் வரி செலுத்துபவர்கள் பயனடைந்துள்ளனர்
  • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல் கடன் வழங்கப்படும்
  • ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது
  • எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது- நிர்மலா சீதாராமன்
  • உலகம் முழுவதற்கும் இன்று இந்தியா தான் மருந்துகளை கொடுத்து உதவுகிறது - நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர்
  • உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் பயன்படும்- நிர்மலா சீதாராமன்
  • மக்கள் சொல்வதை கேட்டு, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும் அரசு
  • தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த காலத்தில் கைகொடுத்துள்ளன
  • பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

Post a Comment

0 Comments