விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மட்டும் மே 26 வர வேண்டும் மற்ற ஆசிரியர்கள் அனைவரும் மே 21 பள்ளிக்கு வர அவசியமில்லை

    மார்ச் - 2020 மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் , விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் பணிகள் விழுப்புரம் / கள்ளகுறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 27.05.2020 முதல் நடைபெறவுள்ளது , மையமதிப்பீட்டு பணியினை சிறப்பாக நடத்துதல் தொடர்பாக அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு கீழ்காண் அறிவுரைகள் வழங்கப்படுகிறது - விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

1. மேல்நிலை இரண்டாமாண்டு விடைத்தாட்கள் திருத்தும் முகாம் 27.05.2020 அன்று , முதல் நடைபெறவுள்ளதால் 26.05.2020 அன்று அனைத்து முதுகலை ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைபுரிய வேண்டும் எனவும் , ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகைதந்திருப்பதை தலைமையாசிரியர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆசிரியர்கள் சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்களின் நலன் கருதி கூடுதல் விடைத்தாள் மதிப்பீட்டு மைங்கள் அமைக்கப்பட்டுள்ளது . எனவே அனைத்து முதுகலை ஆசிரியர்களும் கட்டாயம் முகாம் பணியாற்றிட வேண்டும் எனவும் , எந்த ஆசிரியருக்கும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது .


3. விடைத்தாள் திருத்தும் முகாம் கீழ்காணும் விவரப்படி நடைபெறவுள்ளது .

1)DCE / SO 27.05.2020
2 ) AE'S 28.05.2020

4. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னிட்டு 21.05.2020 அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைதர வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது , தற்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் எந்த ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைதர வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது.


5. முதுகலை ஆசிரியர்களின் மைய மதிப்பீட்டு முகாம் பணிகள் சார்ந்த விவரம் , சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments