ஓய்வு வயது உயர்த்தியது யாருக்கு பொருந்தும்? யாருக்கு பொருந்தாது?

    தமிழகத்து ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அலுவலர்கள் நிரந்தரப் பணி இடத்தில் இருப்பவர்களுக்கு ஓராண்டு ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக நீட்டித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள் . மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை எண் 51 நாள் 07 . 05 . 2020 ன்படி வெளியிடப் பட்டுள்ளது .

    யார் யாருக்கு எப்போது இருந்து பொருந்தும் : நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் அலுவலர்கள் , ஆசிரியர்கள் , பணியாளர்கள் , ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு பொருந்தும் . 02 . 05 . 2020 முதல் பிறந்த தேதி உடையவர்கள் அனைவருக்கும் பணி நீட்டிப்பு உண்டு . அரசாணையில் 31 . 05 . 2020 முதல் என்று குறிப்பிடப்பட்டிருப்பது அந்த மாதத்தின் இறுதி நாளை குறிப்பிட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .

   முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெற்றுள்ளதா ? எந்த அறிவிப்பினையும் வெளியிடாத முதலமைச்சர் அவர்கள் இந்த அறிவிப்பினையாவது வெளியிட்டுள்ளார் . வரவேற்பு பயனாளிகளின் மனநிலையை பொறுத்ததாக அமையும் .

   29 ஆண்டு காலம் பணியாற்றியவர்கள் இன்னும் ஓராண்டு காலம் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கிற போது அவர்கள் 30 ஆண்டு முடிக்கும் போது முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள் .தேர்வுநிலை , சிறப்புநிலை பெறுபவர்கள் ஓராண்டு பணி நீடிப்பதால் அந்த நிலையினை பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் . புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் இன்னும் ஓராண்டு காலம் பணியாற்ற
இந்த அறிவிப்பு உடன் வெளி வருவதற்கான காரணம் என்ன ?

     ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்ற அதிருப்திக்கு தீர்வு காணும் முயற்சியாக கூட இருக்கலாம் . ஒரே சமயத்தில் இந்த ஆண்டு பணி நிறைவு பெறுபவர்களுடைய முழு ஓய்வூதிய பணப் பயன்களை அனுமதிப்பதற்கான நிதி ஆதாரம் அரசிடம் பற்றாக்குறை உள்ளது என்பதையும் மறுப்பதற்கு இயலாது . அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவதற்குள் நிதிப்பற்றாக்குறையினை தீர்வு கண்டு விட முடியுமா ? என்ற கேள்வியும் எழாமலில்லை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

     ஏப்ரல் மாதம் பணி நிறைவு பெற்றவர்கள் மனநிறைவுடன் முழு ஓய்வூதிய பயன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் விடை பெறுவதாக நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் . வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் கொந்தளிப்பின் உச்சக் கட்டத்திற்கு செல்வதை தடுத்து நிறுத்த முடியாது . 95 லட்சம் பேர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து வயது முதிர்வும் நிறைவு பெறுகிற வரையில் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டு வருகிறார்கள் . ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் , தேர்ச்சி பெறாதவர்கள் , தேர்வு எழுத தயார் படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்க தான் முடியுமா ?

     கல்லூரி , பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களைத் தவிர தமிழகத்தில் எந்த ஆசிரியர் சங்கங்களும் ஓய்வு பெறும் வயதை எங்களுக்கு நீட்டித்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடியதாக வரலாற்றில் இடம் பெறவில்லை . 30. 4 - 2020 வரை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 30 . 4 . 2020க்கு முன் ஓய்வு பெற்று 3 1 - 5 - 2020 வரை பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது எனத் தெரிகிறது . அதாவது 2 - 5 - 2020க்கு பிறகு ஓய்வு பெறவுள்ளவர்களுக்கு முழுமையாக ஓராண்டு கிடைக்கும் .

     1 - 6 - 2020 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு இரண்டாண்டுகள் கிடைக்கும் அதாவது பணி நீட்டிப்பில் 60 வயது வரை பணி புரியலாம் ) அத்துடன் ப்ரோமோசன் உள்ளிட்டவை சிலருக்கு தாமதம் ஏற்படலாம் . ஏனெனில் ஒருவர் ஓய்வு பெற்றால் மட்டுமே இன்னொருவர் அந்த இடத்திற்கு வரமுடியும் என்பதால் இது ப்ரோமோசனை சிலருக்கு பாதிக்கலாம் . எனினும் 58 வயதில் இருந்து 59 வயதாக ஒய்வு பெறும் வயதை அதிகரித்து இருப்பது தமிழக அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .


Post a Comment

0 Comments