ஆசிரியர் காலிப்பணியிடம் குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


     தமிழக பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை அரசு,நகராட்சி உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌பள்‌ளிகளில்‌ வரும்‌ ஜூன்‌ 1 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்‌ காலிப்பணியிட விவரங்களை வரும்‌ ஜூன்‌ 6 மாலைக்குள்‌ c3sec.tndse@nic.in என்ற இ-மெயில்‌ முகவரிக்கு அனுப்ப வேண்டும்‌. காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்‌ போது, 20௦19 ஆகஸ்ட்‌ 1ல்‌ பணியாளர்‌ நிர்ணயத்தின்படி உபரி காலிப்பணியிடம்‌ என்று இயக்குநரின்‌ பொதுத்தொகுப்புக்கு ஒப்படைக்‌கப்பட்ட பணியிடங்களை காலிப்பணியிடங்‌களாக காட்டக்கூடாது. கூடுதல்‌ தேவையுள்ளபள்ளிகளின்‌ பணியிடங்களையும்‌ காலிப்பணியிடங்களாக கருதக்‌ கூடாது.இவ்வாறு அதில்‌ கூறப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments