பிரபல கூகுள் மீட் ஆப்-ஐ இனி இலவசமாக பயன்படுத்தலாம் என கூகுள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று முதல் கூகிளின் சொந்த வீடியோ கான்பரன்சிங் பயன்பாடான கூகுள் மீட் ஆப்-ஐ உலகளவில் அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேடுபொறி நிறுவனமான கூகுள் இதை இன்று அறிவித்துள்ளது. இந்த ஆப் ஆரம்பத்தில் கட்டண பயனர்களுக்கான பிரீமியம் பயன்பாடாக தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் வெடிப்பை எதிர்த்துப் போராடுவதற்காக பல நாட்டு அரசாங்கங்கள் விதித்த ஊரடங்கு உத்தரவால் உலகம் முழுவதும் வீடியோ அழைப்பு சேவைகளுக்கான தேவை அதிகரித்ததால் இந்த ஆப் பயன்பாடு படிப்படியாக இலவசமாக பயன்படுத்தக் கூடிய நிலையை எட்டியுள்ளது.
முன்னதாக கூகுள் மீட் ஆப்-இல் கால்களை (Call) மேற்கொள்ள கூகுள் பிசினஸ் அல்லது கூகுள் எஜுகேஷன் கணக்கு தேவைப்பட்டது. ஆனால் இப்போது இணையத்தில், ஐ.ஓ.எஸ் அல்லது ஆண்ட்ராய்டு மூலம் யாருக்கும் இலவசமாக பயன்படுத்த முடியும். கூகுள் காலண்டரை பயன்படுத்துபவர்கள் இந்த சேவையை எளிதாக தொடங்கலாம். கூகுள் மீட் ஆப் மூலம் ஒரு வீடியோ அழைப்பில் 100 பேர் வரை கலந்து கொள்ளலாம்.
ஜிமெயில் மற்றும் கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட வணிகக் கருவிகளின் இலவச பதிப்புகளை கூகிள் நீண்டகாலமாக வழங்கியிருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த புதிய சேவையான கூகுள் மீட்டிற்கு சமமானதாக எதுவும் இல்லை. வரும் வாரங்களில் படிப்படியாக இலவசமாக பயனர்களுக்கு வழங்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. "பிரீமியம் வீடியோ கான்பரன்சிங் தயாரிப்பான கூகிள் மீட்டை அனைவருக்கும் இலவசமாக உருவாக்கி வருகிறோம். இது வரும் வாரங்களில் கிடைக்கும்" என்று ஜி-சூட்டின் துணைத் தலைவர் & ஜெனரல் மேனேஜரான ஜேவியர் சொல்டெரோ கூறியுள்ளார்.
கூகுள் மீட் பயன்பாட்டின் இலவச பதிப்பு மே மாத தொடக்கத்தில் அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும் என்றும், பிரீமியம் பயனர்களுக்கு முன்னர் கிடைத்த அனைத்து சேவைகளும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இலவச சலுகை நிரந்தரமானது என்று கூகிள் மீட்டின் தயாரிப்பு இயக்குனர் ஸ்மிதா ஹாஷிம் தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, "இது ஜிமெயிலைப் போலவே நீடிக்கும்," என்று அவர் கூறினார். "வீடியோ கான்பரன்சிங் என்பது ஒரு அத்தியாவசிய சேவையாக மாறியுள்ளது.
0 Comments