மாணவர்களின் மீதான சுமையைக் குறைக்க 30 சதவீத பாடங்களைக் குறைப்பதற்கு தமிழக அரசு திட்டம்

    நடப்பு கல்வியாண்டில் பல மாதங்கள் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவர்களின் மீதான சுமையைக் குறைக்க, முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் 30 சதவீத பாடங்களைக் குறைப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    இதற்காக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் , கல்வித்துறை அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அரசு நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட வல்லுனர் குழுவினர் கல்விக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் பாடப் புத்தகங்களில் எந்தெந்த பகுதிகளைக் நீக்கலாம் என்பதற்கான பரிசீலினையில் ஈடுபட்டுள்ளனர்.


      இம்மாத இறுதிக்குள் இந்தக் குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நீக்கப்படும் பகுதிகள் குறித்து ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.



Post a Comment

0 Comments