தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளின் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:- தமிழகத்தில் செயல்படும் சுமார் 20 ஆயிரம் சுயநிதி பள்ளிகள் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு பல்வேறு குளறுபடிகளுடன் செயல்பட்டு வருகிறது. இக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வைத்துக் கொண்டு நிச்சயம் தனியார் பள்ளிகளை நடத்திட முடியாது.
எனவே தமிழக அரசு காலாவதியான கல்வி கட்டண நிர்ணயக் குழுவை தயவுசெய்து உடனே கலைத்து விடுங்கள். தமிழகத்திலுள்ள CBSE, ஐ.சி.எஸ்., சி.ஐ. பி., கேம்பிரிட்ஜ் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்காத போது, தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு மட்டும் கல்வி கட்டணம் நிர்ணயிப்பது ஏற்புடைய தல்ல. தமிழக அரசு ஒரு மாணவனுக்கு குறைந்தது 32,000 ரூபாய் செலவு செய்கிறது. அனால் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கும் கட்டணமோ மிகவும் குறைவு. எனவே தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் போது அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதை கணக்கிலும் கவனத்திலும் கொண்டு LKG, UKG வகுப்புகளுக்கு ஒரு கட்டணமும், 1 முதல் 5ம் வகுப்புவரை ஒரு கட்டணமும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு கட்டணமும், 9,10க்கு ஒரு கட்டணமும், 11, 12ஆம் வகுப்புக்கு ஒரு கட்டணமும் நிர்ணயித்தால், கல்வி கட்டண பிரச்னை தீரும்.
எனவே தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், அரசின் வீண் செலவை குறைக்கும் சுயநிதி பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு தலைவர் மற்றும் குழுவி னரை இந்த ஆண்டு முதல் புதிதாக நியமிப்பதை கைவிட்டு, தமிழக அரசு அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ, அதை கட்டணமாக நிர்னயித்து விட்டால் அந்த கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் சம்மதிக்கிறோம். அதற்கு மேல் கட்டணம் வேண்டுவோர் தனியார் பள்ளி இயக்குனரிடம் பள்ளிகளில் உள்ள வசதி வாய்ப்புகளை சுட்டிக்காட்டி பெற்றுக் கொள்வதற்கு அனுமதி தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
0 Comments