உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

       உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது. தொடர் கண்காணிப்பில் உள்ளார் எனவும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. MIOT மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

       தொடக்கத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. அவரது சிடி ஸ்கேன் முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தது. இருந்தும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில் நேற்று முதல் அவருக்கு லேசான இருமல் இருந்து வந்ததை அடுத்து, இன்று செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

   முன்னதாக, அமைச்சர் கே.பி. அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அமைச்சர் தரப்பில் இத்தகவல் மறுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

EbwfkDnU4AErLDA

Post a Comment

0 Comments